Home தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் காவல்துறைசார்பில் கயர்லாபாத் காவல்நிலையத்தில்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி மனுதாரர் குறைதீர்க்கும் நாள் நடந்தது..

அரியலூர் மாவட்டத்தில் காவல்துறைசார்பில் கயர்லாபாத் காவல்நிலையத்தில்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி மனுதாரர் குறைதீர்க்கும் நாள் நடந்தது..

0
அரியலூர் மாவட்டத்தில் காவல்துறைசார்பில் கயர்லாபாத் காவல்நிலையத்தில்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி மனுதாரர் குறைதீர்க்கும் நாள் நடந்தது..

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி, காவல்துறை தலைவர் H.M.ஜெயராம் (மத்திய மண்டலம்) மற்றும் காவல்துறை துணைத்தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா (திருச்சி சரகம்) அறிவுறுத்தலின் பேரில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மனுதாரர் குறைதீர்க்கும் நாள் (பெட்டிசன் மேளா) நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் காயர்லாபத் காவல் நிலையத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் *மனுதாரர் குறைதீர்க்கும் நாளினை * முன்னிட்டு புகார்தாரர்கள் காவல் நிலையம் வர வைக்கப்பட்டு மனுக்கள் மீதான விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்பது பற்றியும், சாலை பாதுகாப்பு பற்றியும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கேடயம் திட்டத்தின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வுஏற்படுத்தினார். கயர்லபத் காவல் ஆய்வாளர் ராஜா உடனிருந்தார்.

இதேப்போல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் புகார்தாரர்கள் மனுக்கள் மீதான மனுதாரர் குறைதீர்க்கும் நாள் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெயராம் உடைனிருந்தார். மாவட்ட காவல்துறையின் இப்புதிய முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here