


அரியலூர் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து வழிநடத்தி வரும் அரியலூர் சோழதேசம் அமைப்பினர் இன்று இணையதளம் வாயிலாக நடைபெற்ற புகைப்படபோட்டியில் வென்றவர் 5 நபர்களுக்கு பரிசளிப்பு விழா அரியலூர் மாவட்ட காவல்துறை போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி பரிசுகளை அளித்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கொராணா பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கேடயம் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் பசுமையை உருவாக்க அதிகப்படியான மரக்கன்று நட்பு பராமரிக்கவும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கவும், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாவட்டத்தில் குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கயர்லாபத் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள் சாலை பாதுகாப்பு, கேடயம் திட்டம் மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், தன்னார்வலர்கள், பெண்கள் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் வன்முறையற்ற, பாதுகாப்பான அரியலூர் மாவட்டத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் மற்றும் அரியலூர் சோழதேசம் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.