

புதுக்கோட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக. பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையில் இன்று 11.10.2020 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள், காவல் உதவி ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி மற்றும் காவலர்கள் இணைந்து புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள குழந்தைகளுக்கு மலர்கள், இனிப்பு மற்றும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வித்தனர்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போது அவர்களின் பாதுகாப்பு கருதி திருச்சி சரக காவல்துறையின் கேடயம் (Sheild) திட்டத்தின் உதவி எண்களை 6383071800, 9384501999 அழையுங்கள் என்றும், துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வன்முறையற்ற, பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை.