தாராபுரம் போக்குவரத்து காவல் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்நிலையம் இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது

259

தாராபுரம், அக் 11-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
திருப்பூர் மாவட்டம் உட்கோட்டம், தாராபுரம் போக்குவரத்து காவல் துறை,மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்நிலையம் இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தாராபுரம் அலங்கியம் புறவழி முன்பு நடைபெற்றது..

இந்த விழிப்புணர்வை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் அவர்கள் அறிவுத்தலின் பேரில் தாராபுரம் துணை கண்கானிப்பாளர் ஜெயராமன் மேற்பார்வையில் தாராபுரம் காவல் ஆய்வாளர்  மகேந்திரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல் சாலை பாதுகாப்பு உறுதி மொழி வாசக துண்டு பிரச்சாரங்களை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கும் நடந்து செல்பவர்களும் வழங்கப்பட்டது.
மேலும்.,
சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாசகம்

தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டாம்.,
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட வேண்டாம்,
குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம், அதிவேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம்,
சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம்,
இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்ய வேண்டாம்,
சிக்னல் விளக்கு மற்றும் சாலை குறியீடுகளை மதித்து நடக்கவும்,
போக்குவரத்து காவலரின் கை சைகைகளை மதித்து நடக்கவும்,
ஓடும் பேருந்தில் ஏற இறங்க வேண்டாம்,
போன்ற அறிவுரைகளை ஓட்டுனருக்கு, நடந்து சென்று அவர்களுக்கும் புரியும்படியும் தெளிவாகவும் கூறினார்கள்.
இதில் சார்பு ஆய்வாளர்கள்,காவலர்கள், பெண் காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here