திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் – ஐ.ஜி. ஜெயராம் தகவல்.

460

திருச்சி,

திருச்சி மத்திய மண்டலத்தில், திருச்சி புறநகர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என 9 மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்திற்கு உட்பட்ட ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் குறித்த பட்டியலை ஐ.ஜி. ஜெயராம் வெளியிட்டுள்ளார்.

அதில், இதுவரை 2 ஆயிரத்து 690 ரவுடிகளின் சரித்திர பதிவேடு ஏற்கனவே உள்ளதாகவும், கடந்த 3 மாதங்களில் புதிய ரவுடிகளாக 476 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரவுடிகளுக்கு அவர்களின் குற்றச்செயல்கள் அடங்கிய சரித்திர பதிவேடு துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் 63 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, 9 மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.ஜி. ஜெயராம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here