
மதுரை மாவட்டம் சோழவந்தாணை சேர்ந்த லதா 24 பெயர் மாற்றப்பட்டுள்ளது இவருக்கும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மகன் ராஜமுருகன் 30 என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது திருமணம் நடந்ததில் இருந்து இருந்து லதாவை ராஜமுருகன் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் இதுகுறித்த 2019ஆம் ஆண்டு ராஜமுருகன் மீது வரதட்சணை மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது தற்போதுராஜாமுருகன் லதாவை ஆபாசமாக சித்தரித்து முகநூல் மற்றும் வலைதளங்களில் வெளியிட்டு லதா பெற்றோருக்கும் அனுப்பி உள்ளார் இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் லதா புகார் கொடுத்தார் இதன் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிவு செய்தார் விசாரணை செய்ததில் ராஜமுருகன் மார்த்தாண்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது இதன் பேரில் போலீசார் தன பாண்டி கார்த்திக் ஆகியோரை மார்த்தாண்டத்தி க்கு அனுப்பி வைத்து அங்குள்ள போலீஸ் உதவியுடன் ராஜ முருகனை கைது செய்தனர் அப்போது ராஜமுருகன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார் போலீசாரின் சாமர்த்தியத்தால் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர் பின்பு இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமை காவலர்கள் பார்த்திபன் கோபி சிவராமன் ஆகியோர் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு ராஜமுருகன் ஐ கொண்டு வந்தனர் போலீஸ் விசாரணையில் ராஜமுருகன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது இதன்பேரில் ராஜமுருகனை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறைச்சாலையில் அடைத்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்