திருச்சி, தஞ்சை உட்பட மத்திய மண்டல மாவட்ட பகுதியில்
இரு சக்கர வாகனம்
திருட்டில் ஈடுப்பட்ட திருடன் கைது – 77இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

489

திருச்சி அக் 11

திருச்சி மாநகர பகுதிகளில் வாகன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் முனைவர் லோகநாதன் உத்தரவின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு எஸ்ஐ கருணாகரன் தலைமையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சிங்காரத்தோப்பு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது என்ற இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது, அவர் தனது முகவரி பற்றியும் மற்றும் அவர் இருசக்கர ஓட்டி வாகன் விவரங்களை முன்னுக்குபின் முரணாக கூறியதால், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பற்றி விசாரணை செய்த போது அந்த வாகனம் கடந்த 28.ம் தேதி சின்ன கடை வீதியில் உள்ள ஆனந்தா ஸ்டோர்ஸ் முன்பு திருடப்பட்டது என்பது தெரியவந்தது. தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் என்பவரின் மகன் ராஜ்குமார் (51). என்பது தெரியவந்தது.

மேலும் அவர் திருச்சி மாநகரம் கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களிலும், திருச்சி மாவட்டம் தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம். புதுக்கோட்டை, அரியலூர். பெரம்பலூர் எல்லைக்குட்பட்ட இடங்களிலும் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 77 இரு சக்கர வாகனங்களை திருடியிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராஜ்குமார் கெ்ாடுத்த தகவல்களின் அடிப்படையில் திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்மந்தப்பட்ட வாகனங்கள் ஓப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. மாநகர கமிஷனர் லோகநாதன் இரு சக்கர வாகனங்களுக்கான சாவியை வழங்கினார். துணை கமிஷனர்கள் பவன்குமார்ரெட்டி, வேதரத்தினம், உதவி கமிஷனர் ரவிஅபிராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

Trichy JK
9894920886

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here