
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலணி தெருவைச் சேர்ந்தவர் கெங்காசலம் மகன்
வெள்ளையன் 52. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளராக இருந்ததாக தெரிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த மகள் முறை உடைய சிறுமி ஒருவர் தாய் தந்தையை இழந்து தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அவர் அங்கு உள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த சிறுமியை வெள்ளையன் தனியாக இருந்த தனது தொகுப்பு வீட்டை சுத்தம் செய்ய அழைத்து சென்று உள்ளார். அப்போது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சல் போட்டு உள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த சிறுமியை மீட்டு வெள்ளையனை பிடிக்க முயற்சி செய்து உள்ளனர். அங்கிருந்து தப்பித்த அவர் தளவாய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனை தொடர்ந்து அரியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொருப்பு மகாலட்சுமி வெள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்.