திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி ராஜமான்நகரில் முதலாளி சம்பளம் தராதது கண்டித்து மிஷினில் தலையை வைத்து வாலிபர் பலி.

174

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே உள்ள ராஜமான் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 35) கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அலுமினிய பட்டறையில் வேலை பார்த்துவருகிறார்.

பாலமுருகன் இன்று முதலாளி சம்பளம் தராததால் அலுமினிய பட்டரை மிஷினில் தலையை வைத்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதலாளி சம்பளம் தராததை கண்டித்து மிஷினில் தலை வைத்து பாலமுருகன் இறந்த செய்தியால் இப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here