மதுரை அருகே அதிமுக ஊராட்சி தலைவர் உள்ளிட்ட இருவர் வெட்டி படுகொலை: போலீசார் விசாரணை

244

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ளது குன்னத்தூர் கிராமம்.

இந்த கிராமத்திற்கு
அதிமுக கட்சியை சேர்ந்த கிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார்.

இவரும் இவரது உறவினரான
முனுசாமி ஆகிய இருவரும் நேற்று இரவு வெளியே ஒரு வேலையாக சென்று வருகிறேன் என வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளவர்கள் வீடு திரும்பாத நிலையில் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனிடையே
இன்று அதிகாலை குன்னத்தூர் மலை அடிவாரத்தில் கிருஷ்ணனும் அவரது உறவினர் முனுசாமி ஆகிய இருவரும்
கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முன் விரோதம் காரணமாகஇந்த இரட்டை கொலை நடந்து இருக்கிறதா? அல்லது வேறு காரணங்கள் ஏதும் உண்டா? என்பது குறித்து
போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊழியரை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here