
திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திருமதி. ஜீவமணி என்பவர் பேருந்து மூலம் தாராபுரத்தில் இருந்து குண்டடம் சென்று கொண்டிருந்தார் அப்போது பேருந்தில் யாரோ தவறவிட்ட பணப்பையை எடுத்து பார்த்ததில் அதில் இரண்டாயிரத்து நானூறு ரூபாய் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தன அதனடிப்படையில் உரிமையாளருக்கு தகவலை தெரிவித்தார். பின்னர் அந்த விவரங்களை உறுதிப்படுத்தி அவர்களிடம் பணப்பையை ஒப்படைத்தார். காவலர் அவர்களின் இந்தச் செயலை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல் (இ.கா.ப) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.