
கடந்த 2018 ஆம் வருடம் மதுரை மாவட்டம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலமேடு பகுதியை சேர்ந்த (14) வயது சிறுமிக்கு அலங்காநல்லூர். சேர்ந்த ராம்குமார் (32) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக, சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட அமர்வு நீதிபதி குழந்தைகளின் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழான வழக்குகளின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ப்ளோரா , சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த ராம்குமார் என்பவருக்கு மூன்று வருட சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 5,000/- அபராத தண்டனையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையம் சமயநல்லூர் காவல் ஆய்வாளர்.கிரேஸ் சோபியா பாய் மற்றும் தலைமை காவலர், .கலைச்செல்வி ஆகியோரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்