
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு..… மதுரை மாவட்டம் வில்லாபுரம் இபி காலனியை சேர்ந்த சத்தியமூர்த்தி வயது 66. இவரது மனைவி சாந்தி வயது.58 தொழில் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்தனர் பின்புறமாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சத்தியமூர்த்தியின் இருசக்கர சக்கர வாகனத்தை மறித்து சாந்தி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர் இதுகுறித்து சத்தியமூர்த்தி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்