அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.

157

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் திருமேனி தலைமையில் இன்று சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை மேலாளர், சிமெண்ட் ஆலை அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதை தவிர்க்கவேண்டும் மீறும் பட்சத்தில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, GPS பொருத்தப்பட வேண்டும். கனரக வாகனங்களில் தார்ப்பாய்கள் அமைக்காமல் செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து பகுதியில் புதிதாக வேகத்தடைகள் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முக்கிய சாலை சந்திப்புகள், கிளைப்பிரிவு சாலைகள் போன்ற இடங்களில் மின் விளக்குகள் பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here