ஆண்டிமடத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை
யினர்.

171

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்அறிவுறுத்தலின்
படி, ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு கொரானா பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, குற்ற தடுப்பு விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி, கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவி கொரானா காலத்தில் பாதுகாப்புடன் இருப்பது பற்றி எமன் வேஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு முககவசம், சனிடைசர் வழங்கப்பட்டது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் தாக்குதல்களிலிருந்து காப்பது தொடர்பாகவும், திருச்சி சரக கேடயம் திட்டத்தின் நன்மைகள் மற்றும் கேடயம் திட்டத்தின் உதவி எண்கள்( 6383071800, 9384501999 ) பற்றியும், குழந்தை திருமணம், சிறார் தொழிலாளர் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அனைத்து வணிகக் கடைகளிலும் CCTV கேமராக்கள் பொருத்துவது தொடர்பாகவும், பொதுமக்கள் தங்களது பகுதியிலும், வீடுகளிலும் கேமராக்கள் பொருத்தி குற்றம் நிகழாவண்ணம் பாதுகாப்புடன் இருப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இத்ரீஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here