


அரியலூரில் 08.10.2020 அன்று இரவு ரோந்து பணியில் அரியலூர் நகர உதவி ஆய்வாளர் (பயிற்சி) மேகலா மற்றும் தலைமைக் காவலர் சுரேஷ்குமார், ராஜசேகர் மற்றும்காவலர்ரஞ்சித்குமார்
ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும்படியான நபர்களை அழைத்து விசாரணை செய்ததில் அவர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவர்களை உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி கைது செய்தனர்.
மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் இன்று சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து நேரிலும், வான் செய்தி வழியாகவும் பாராட்டினார்.
மேலும் மேற்படி குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்தது பற்றிய அனுபவத்தை அனைத்து காவல்துறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்படி உதவி ஆய்வாளர் (பயிற்சி) மேகலா வான் செய்தி மூலமாக தனது அனுபவத்தை அரியலூர் மாவட்ட காவல் துறையினருடன் பகிர்ந்து கொண்டார்.