Home தமிழ்நாடு தேசிய காவலர் தினத்தையொட்டி அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள்<br>நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

தேசிய காவலர் தினத்தையொட்டி அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள்
நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

0
தேசிய காவலர் தினத்தையொட்டி அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள்<br>நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

தேசிய காவலர் தினத்தையொட்டி அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள்
நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி ,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நீத்தார் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மக்களுக்கான பாதுகாப்பு பணியின்போது தன் இன்னுயிரை நீத்த காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்களின் வீர மரணங்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் வகையில் நீத்தார் நினைவு தின கவாத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நீத்தார் நினைவுச் சின்னத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர்இரத்னா, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் மாவட்ட நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வீரமரணமடைந்த காவலர்களின் உறவினர்கள்மலர் வளையம் வைத்துஅஞ்சலிசெலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் பேசும்போது, நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்தகாவல்துறையி
னரின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர் துப்பாக்கி குண்டு முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.வீர வணக்க நாளை முன்னிட்டு போலீஸார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here