
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரியை பகுதியில் வசித்து வரும் குமார் மற்றும் தமிழரசி தம்பதியினர் டீக்கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தம்பத்தினரின் மகள் 10 வயது சிறுமி நேற்று மாலை 7 மணியளவில் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றிந்த நிலையில்,

கடையின் அருகில் நின்று கொண்டிருந்த ஓம்சக்தி நகரை சேர்ந்த முத்துராஜ்(29) என்பவன் சிறுமியை நோட்டமிட்டு நைசாக பேச்சு கொடுப்பது போன்று மறைவான சந்துக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லைகள் செய்துள்ளான்.
உடனே அவனிடமிருந்து சாதூரியமாக சத்தம்போட்டு தப்பி சென்ற சிறுமி குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் முத்துராஜை பிடித்து மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சிறுமியின் தாய் தமிழரசி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முத்துராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்