
தேனி நகரில் நேரு சிலை பகுதியில் பழைய சிக்னல் அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S. முத்துசாமி,இ.கா.ப., அவர்களால் ரிப்பனை வெட்டி துவக்கி வைக்க, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E. சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களால் சிக்னல் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் இந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய சிக்னல் சாலை பாதுகாப்பு நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேனி உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் முகக் கவசம் அணிவதன் அவசியத்தையும் வலியுறுத்தி மற்றும் துண்டு பிரச்சாரங்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
