

மதுரை பைபாஸ் ரோடு பழங்காநத்தம் நேரு நகர் பாலாஜி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் இவர் கடந்த ஜூலை 16ஆம் தேதி வீட்டில் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார் இது மட்டுமல்லாமல் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த ஐம்பதாயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக.. மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வீட்டை சுற்றி இருக்கக் கூடிய பல்வேறு சிசிடிவி கேமரா காட்சிகளை கைக்குட்டை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் மூன்று மாதமாக துப்பு கிடைக்காமல் திணறி வந்த காவல் துறைக்கு சிசிடிவி கேமரா காட்சியில் அதே பகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளி பழனி குமார் என்பவர் ஒரு மணி நேரத்தில் 2 முறை உடை மாற்றுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது உடை மாற்றி அதற்கு காரணம் என்பது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் வெளியாகி உள்ளது அவர் பஞ்சவர்ணம் மூதாட்டியிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் மேலும் 10 ஆயிரம் பணம் கேட்டு சென்ற போது மூதாட்டி தர மறுத்ததால் ஆத்திரத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை திருடி வந்ததும் தெரியவந்தது அதனை தொடர்ந்து படிக்குமாறு கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 46 கிராம் தங்க நகை மற்றும் பணம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர் மூன்று மாதத்திற்கு பிறகு குற்றவாளியை திறம்பட விசாரணை மேற்கொண்டு கைது செய்த தனிப்படை காவல் துறை திலகர் திடல் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் சக்கரவர்த்தி மற்றும் எஸ் எஸ் காலனி குற்றப்பிரிவு ஆய்வாளர் டாக்டர் சக்கரவர்த்தி எஸ் எஸ் காலனி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிளவர் ஷீலா உள்ளிட்ட காவல்துறையினருக்கும் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் வெகுவாக பாராட்டினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்