

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை (அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை) முன்னிட்டு 27.10.2020 இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மாவட்ட அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.அதே போன்று அனைத்து காவல் நிலையங்களிலும்காவல்துறையினர் ஊழலை ஒழிக்க அனைவரும் நேர்மையாகவும்,கண்ணியமாகவும் ,சட்டவிதிகளைபின்பற்றிசெயல்
படுவோம் என உறுதி மொழி ஏற்றனர்.நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்பதை உணர்ந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் செயல்பட வேண்டும்.
