தர்மபுரி மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பானது தர்மபுரி ஆயுதப்படை காவல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

248

தர்மபுரி மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பானது தர்மபுரி ஆயுதப்படை காவல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் காவலர்களுக்கு சட்டத்திற்கு முரண்பட்டு உள்ள குழந்தைகளுக்கு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும் என்றும் Pocso Act குழந்தை திருமண சட்டம் ஆகிய வழக்குகளில் புலன் விசாரணை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நீதிமன்ற விசாரணையின்போது குழந்தைகளுக்கு மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் மேற்படி வழக்கின் விசாரணையில் சாட்சிகளை நீதிமன்றத்தில் எவ்வாறு ஆஜர் செய்வது பற்றியும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் கூடுதல் அமர்வு நீதிபதி திரு. ஜீவானந்தம் குற்றவியல் நடுவர் நீதிபதி திரு. செல்வராஜ் அரசு வழக்கறிஞர் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், செல்வி, தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here