
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பிச்சை பிள்ளை (43) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியிடம் பலவந்தமாக பாலியல் வன் தாக்குதல் செய்ய முயற்சித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரகலா இவ்வழக்கின் விசாரணை செய்து குற்றவாளி பிச்சை பிள்ளை என்பவரை நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தார்.
இந்த சூழ்நிலையில் பிச்சை பிள்ளை வெளியே இருந்தால் மேலும் பல குற்றங்கள் செய்ய இயலும் என்ற காரணத்தினாலும் பிச்சைபிள்ளையை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரகலா ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் ,
மாவட்ட ஆட்சியர் ரத்னாவிற்கு பரிந்துரை செய்தனர். அப்பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குற்றவாளி பிச்சை பிள்ளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் பிச்சை பிள்ளை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் 04/11/2020 அன்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.