தாராபுரம் நவம்பர் 04-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறைக்கு கொழிஞ்சிவடி பகுதியில் கஞ்சா விற்பதாக தொலைபேசி மூலம் ரகசிய தகவல் வந்தது .
தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாராபுரம் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் அப்பகுதியில் பேருந்து நிறுத்தில் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் வீராச்சிமங்கலம் பகுதி அருகே ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் விஜயின் (வயது 60..)
விஜயன் கடந்த சில வாரங்களாக கொழிஞ்சிவடி, மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது, பின்னர் அவரை கைது செய்து மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் எடையுள்ள போதைப் பொருளான கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சாவை எங்கு வாங்கினார் என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..