அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் வினித் என்கிற வினித் குமார் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்ற 18வயது நிரம்பாத பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்வதாக கடத்திச் சென்று பாலியல் வன் தாக்குதல் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து தலைமறைவாக இருந்த
வினித் என்கிற வினித் குமாரை நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தார்.
இந்த சூழ்நிலையில் வினித் குமார் வெளியே இருந்தால் மேலும் பல குற்றங்கள் செய்ய இயலும், என்ற காரணத்தினாலும் வினித் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெயராமன், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர்,மாவட்ட ஆட்சியர் ரத்னாவிற்கு அவர்களுக்கு பரிந்துரை செய்தனர். அப்பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குற்றவாளி பிரபாகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் பிரபாகரனை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் 04/11/2020 அன்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.