
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் ஜெயராம் அவர்களின் ஆணைக்கிணங்க போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் மதுபழக்கம் மற்றும் மன அழுத்தம் உள்ள காவல் ஆளினர்களை வரவழைத்தார். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் சிறப்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர், மற்றும் கரூர் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு திருச்சி மாவட்ட எஸ்பி ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள். திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் காவல் ஆளினர்களுக்கு குடிபழக்கத்தினால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் தீமைகளை விளக்கினார்.
குடிப்பழக்கத்தினால் இழந்த காவல் ஆளினர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்புகளையும் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயரம் சிக்கல்களை விளக்கி கூறினார். இக்கூட்டத்திற்கு வந்த காவல் ஆளினர்கள் மன நெகிழ்ச்சியடைந்தும் தாங்கள் செய்யும் தவறை உணர்ந்து வருத்தமடைந்தனர். அதன் பின்னர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து காவல் ஆளினர்களுடன் அருகில் நின்று கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து காவல் ஆளினர்களின் குறைகளை சுமார் 2 மணி நேரத்திற்கு மிகாமல் நின்று கொண்டே தனித்தனியே கேட்டறிந்தது காவல் ஆளினர்களுக்கிடையே பெரும் ஆச்சரியத்தையும், மன சந்தோஷத்தையும் ஏற்படுத்தினார்.
குடிபழக்கம் மற்றும் மன அழுத்தத்திற்கான காரணங்கள் கேட்டறிந்து நடவடிக்கை:
- கூட்டத்திற்கு வந்த காவல் ஆளினர் ஒருவர் நான் சுமார் 80 கி.மீ தொலைவில் இருந்து வருவதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு குடிபழக்கம் வந்தது எனக் கூறினார்.
அவருக்கு உடனே வீட்டிற்கு அருகாமையில் சுமார் 10 கி.மீ தொலைவிற்குட்ட காவல் நிலையத்தில் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.
2 . காவல் ஆளினர் ஒருவர் தனக்கு ஒரு 3 (பி) தண்டனை உள்ளது அதனால் எனக்கு குடிப்பழக்கம் வந்தது எனக் கூறினார்.
அவருக்கு உடனே அந்த தண்டனையை நீக்க ஆணை பிறப்பித்தார்.
- மற்றொரு காவல் ஆளினர் அவரது ஊரில் சில பிரச்சனை உள்ளதாக கூறினார்.
உடனே அவருடைய பிரச்சனைக்குரிய எல்லைக்குட்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளரை வரவழைத்து பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது.
திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் அவர்களின் நடத்திய இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் ஆளினர்களுக்கு வழங்கிய அறிவுரையும் காவல் ஆளினர்களின் குடும்பத்தை கவனத்தில் கொண்டு குடும்பத்தின் மீது உறுதி மொழி எடுக்கச் செய்தும் மற்றும் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்பட்ட செயலும் காவல் ஆளினர்கள் , மற்றும் காவல் ஆளினர்களின் குடும்பங்களிடையே மன சந்தோஷத்தையும் பெரும் வரவேற்பையும் ஏற்ப்படுத்தியது.