





மதுரை தெற்குவாசல் விளக்குத்தூண் அருகே உள்ள ஓர் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சிறிய தீ விபத்தில், தீயை அணைக்க சென்ற வீரர்கள் இருவர் உயிரிழப்பு. மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
மதுரை தெற்குவாசல் விளக்குத்தூண் அருகே உள்ள பிரபல ஜவுளிக்கடையின் எதிரே உள்ள ஓர் கட்டடத்தில் நள்ளிரவில் தீ பற்றியுள்ளது. தகவல் அறிந்து மதுரை பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
தீயை அணைக்க முயன்றபோது, அருகிலிருந்து பழைய கட்டடத்தில் திடீரென ஏற்பட்ட விரிசல் காரணமாக, இடிந்து விழுந்தது. அச்சமயம் தீயை அணைக்கும் பணியிலிருந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மதுரை நகர் தீயணைப்பு நிலையம் மற்றும் மீனாட்சி கோவில் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), சிவராஜன் (32) ஆகியோர் வீரமரணம் வீரர்களாவர்.
மதுரை விளக்குத்தூண், தீபாவளி விற்பனை காரணமாக மிகவும் பரபரப்பான பகுதியாகும். மக்கள் நெரிசல் மிகுந்த இப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயை அணைக்கச் சென்ற வீரர்கள் வீரமரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்