
“இது உங்கள் சொத்து” திருச்சியில் திரைப்பட பாணியில் பேருந்தை கடத்திய வாலிபர்..
திருச்சியில் இன்று 15/11/2020 திரைப்பட பாணியில் அரசு பேருந்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்படம் ஒன்றில் அரசு பேருந்தினை விற்பதற்காக பயணிகள் இருவர் வியாபாரம் பேசுவர்.. இதனை கண்ட பேருந்து நடத்துனர் விசாரிக்கும்போது அவர்களிருவரும் “இது உங்கள் சொத்து” என்று பேருந்தில் எழுதி இருப்பதை காட்டி விளக்கம் அளிப்பார்கள்..
அந்த வகையில் அரசு பேருந்தின் மீது உள்ள தனக்கு இருக்கும் உரிமையை திருச்சியில் உள்ள வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் வெளிப்படுத்தியுள்ளார்.
திருச்சி வா.உ.சி ரோடு பகுதியில் சாப்பிடுவதற்காக பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக பேருந்து தானே சென்று கொண்டிருப்பது இருந்துள்ளது அதனால் அதிர்ச்சிக்குள்ளாகி பேருந்தினுள் ஏரிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பார்த்தபோது கஞ்சா போதையில் நபரொருவர் பேருந்தை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார் இவர்கள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தக் கூறியும் நிறுத்தாமல் பேருந்தை மத்திய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு வரை இந்த கஞ்சா போதை வாலிபர் ஓட்டி வந்துள்ளார் பேருந்துக்குள் சத்தம் கேட்பதை அறிந்த பணியிலிருந்த போக்குவரத்து காவல்துறை காவலர் பேருந்தை நிறுத்தி விசாரித்தபோது மிளகுபாறை வேடுவர் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் அஜித் குமார் (வயது 32) என்பது தெரியவந்தது உடனே சம்பந்தப்பட்ட நபரை கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்று சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.