
43 மணி நேரத்தில் கொலையாளிகளை அமுக்கிய தனிப்படை – எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு.
காயல்பட்டினம் அருகே பொதுக்கழிப்பிடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் வழக்கு கொலை வழக்காக மாற்றம் –
நேற்று முன்தினம் (13.11.2020) காலை ஆத்தூர், முக்காணி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த செல்வமுருகன் மனைவி (புகார்தாரர்) திருமதி. செந்தூர் புஷ்பம் (29) என்பவர் தனது தந்தையும், விளாத்திக்குளம் துவரந்தையைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகனுமான பச்சைமால் (53) என்பவர் தனது வீட்டில் தங்கி மரம் வெட்டும் வேலை மற்றும் கொத்த வேலைக்கு சென்று வந்ததாகவும், கடந்த 09.11.2020 அன்று இரவு சாப்பிட்டுவிட்டு ஆறுமுகநேரி செல்வதாக தன்னிடம் கூறிவிட்டுச் சென்றவர் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் ரத்தினபுரி பப்பரபள்ளி சுடுகாட்டு ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில உள்ள பாத்ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் ஆறுமுகநேரில் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கு சம்மந்தமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன், தலைமை காவலர்கள் இசக்கியப்பன், முத்துக்குமார், முதல் நிலை காவலர்கள் ரமேஷ், எழில், சொர்ணராஜ் மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தவுப்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இறந்த பச்சைமால் என்பவருடன் காயல்பட்டினம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் வேல்முருகன் (32), ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த சுந்தரம் மகன் மாரியப்பன் (43), தேனி மாவட்டம் காணவிளையைச் சேர்ந்த ராமசாமி மகன் குமார் (49) ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே பாரதி நகரில் உள்ள ஒருவர் வீட்டின் வளாகத்தில் உள்ள தனி அறையில் தங்கி வீடு கட்டும் கொத்த வேலை செய்தபோது 12.11.2020 அன்று இரவு தங்கியருந்த அறையில் வைத்து அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் மேற்படி வேல்முருகன், மாரியப்பன், குமார் ஆகியோர் அவரை தாக்கி கொலை செய்து பரப்பாடி நடுத்தெருவைச் சேர்ந்த தங்கதுரை மகன் செல்வகுமார் (36) ஓட்டி வந்த மாருதி ஆம்னி வேனில் (TN 72 BY 8489) ஏற்றி காயல்பட்டினம் கொண்டு வந்து இரத்தினாபுரி பப்பரப்பள்ளி சுடுகாட்டு ரோட்டில் உள்ள பாத்ரூமில் பச்சைமால் பிரேதத்ததை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மர்ம மரணமாக பதிவு செய்ப்பட்ட வழக்கை மேற்படி தனிப்படையினர் கொலை வழக்காக மாற்றம் செய்து, இன்று (15.11.2020) காயல்பட்டினம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் (A1) வேல்முருகன் (32), ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த சுந்தரம் மகன் (A2) மாரியப்பன் (43), தேனி மாவட்டம் காணவிளையைச் சேர்ந்த ராமசாமி மகன் (A3) குமார் (49) மற்றும் பரப்பாடி நடுத்தெருவைச் சேர்ந்த தங்கதுரை மகன் (A4) செல்வகுமார் (36) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின் மேற்படி (A1) வேல்முருகன் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும், (A4) செல்வகுமாரிடமிருந்து மாருதி ஆம்னி வேனையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்யப்பட்டதை விரைவாக 43 மணி நேரத்தில் கண்டு பிடித்து 4 எதிரிகளையும் கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.