
அரியலூர்: நவ் 30
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(57). இவர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை பணி நிமித்தமாக அரியலூர் நீதிமன்றத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரியலூர் புறவழிச்சாலையில், வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த செல்வராஜ் அதேயிடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார் ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்த மனோஜ்குமாரிடம்(22) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.