
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் சிலப்பபதிகாரம் தெருவில் 8 வயது பெண்குழந்தை அழுதபடி அங்கும்,இங்கும் சுற்றி திரிந்துள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
உடனடியாக குழந்தையை நேரடியாக சென்று சந்தித்த காவல் ஆய்வாளர் திரு.நந்தகோபால் அவர்கள், குழந்தையிடம் அன்பாக பேசி முகவரியை கேட்டு, குழந்தையை நேரடியாக அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
காவல் ஆய்வாளருக்கு குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றார்கள்.