கீழப்பழுவூர் அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூரமாக பெண்னை கொலை செய்த நபரை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

237

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கோவில்சீமை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (எ) விஜயபாஸ்கர் (39)த/பெ வீரமுத்து என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழப்பழுவூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன் தாக்குதல் செய்து,மிக கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி விட்டார். மேற்படி நபரை காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்தில் பெயில் பெற்ற விஜய் பாஸ்கர்நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஜய் பாஸ்கரை அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதன் அவர்கள்,கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் அவர்கள், தலைமையிலான தனிப்படையினர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் , தலைமை காவலர் சின்னதுரை , முதல் நிலை காவலர் தர்மராஜ் ஆகியோர் கரூர் மாவட்டம் லால்பேட்டை அருகே கைது செய்து, 23.11.2020 அன்று ஜெயங்கொண்டம் நீதிமன்ற கிளை சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட விஜயபாஸ்கர்

“மக்களின் வாழ்விற்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்”- என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு .

விஜய் பாஸ்கர் மீது 29 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு மற்றும் கொலை வழக்கு இருப்பதனால், இவர் மேலும் வெளியே இருந்தால் மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபடலாம், மக்கள் வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கலாம் என்ற காரணத்தினாலும் விஜய் பாஸ்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க
மாவட்டகாவல்துறைகண்கா
ணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் விஜயபாஸ்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 10.12.2020 அன்று உத்தரவிட்டார்.இதனை அடுத்து விஜயபாஸ்கரை காவல் துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here