
கால்வாயில் விழுந்த பசு மாட்டை பத்திரமாய் மீட்ட தீயணைப்பு துறையினர். பைபாஸ் சாலை துரைசாமி நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ஒன்று எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்தது மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அதை மீட்க முயற்சி செய்தும் எந்தவித பலனளிக்கவில்லை உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் நிலைய அலுவலர் கூடுதல் பொறுப்பு உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாக்கடை கால்வாயில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர் வி செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

