உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தவறவிட்ட 45,000/- ரூபாய் பணத்தை மீட்டு அதை உரியவரிடம் ஒப்படைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

244

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் என்பவர் தனது சொந்த தேவைக்காக பொருட்கள் வாங்குவதற்கு ரூ.45 ஆயிரம் பணத்தை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு வந்துள்ளார். அப்போது உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சில பொருட்களை வாங்கிவிட்டு மீதி பணத்தை பாக்கெட்டில் வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பாக்கெட்டில் பார்த்த போது பணத்தைக் காணவில்லை. பதறிப்போன பிரகாஷ் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் திரு.செல்வவிநாயகம் அவர்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி ஒருமணி நேரத்தில் திரு.பிரகாஷ் தவறவிட்ட 45,000 ரூபாய் பணத்தை மீட்டு அவரிடமே மீண்டும் ஒப்படைத்தார். இதையறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் இ.கா.ப அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

காவல்துறையின் இந்த உடனடி நடவடிக்கையைக் கண்டு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here