

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை சட்டத்தின் மூலம் கலைப்பதற்கான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது இந்த பயிற்சி காவலர்களின் முன்பு சட்டவிரோதமாக கூடி நிற்கும் கூட்டத்தை காவல் துறையினர் முதலில் எச்சரிக்கை விடுத்தனர் தொடர்ந்து கலையாத பட்சத்தில் கண்ணீர் புகை குண்டு வீசபட்டும் தொடர்ந்து கூடி இருக்கும் கூட்டத்தை குறைந்தபட்ச பலத்தை கொண்டு லத்தியால் கலைத்தும் இறுதியாக கலையாத பட்சத்தில் துப்பாக்கியால் சட்டவிரோதமாக கூடி இருக்கும் கூட்டத்தை சுட்டனர் பின்னர் துப்பாக்கி சூட்டில் காயம் பட்டவரை முதலுதவி மருத்துவ குழு கைபற்றி சிகிச்சைக்காக 108 அவசர ஊர்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போல் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சுற்றி நின்று பார்த்தனர் இந்த ஒத்திகையின் போது காவல் துணைi கண்காணிப்பாளர் ராமநாதன் , காவல் ஆய்வாளர் ராஜபாண்டியன் , உள்ளிட்டோர் உடனிருந்தனர்