
சமூக ஊடகங்களில் சைபர் குற்றவாளிகள் போலி கணக்குகளை பெண்களின் அடையாளங்களை பயன்படுத்தி உருவாக்கி உண்மையான நபர்களை போல ஆள்மாறாட்டம் செய்து தங்களது நட்பை விரும்புவதாக கூறி செய்தி அனுப்பி நட்பு வட்டத்தில் இணைகின்றனர். பின்னர் தங்களது தனி விவரங்களான வங்கி எண்¸ கிரெடிட் கார்டு எண் போன்றவைகளை பெற்று மிரட்டி பணம் பறிக்கின்றனர். எனவே சமூக ஊடக வலைத்தளங்களில் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் நண்பர் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம்¸ தங்களது தனிபட்ட விவரங்களை யாரிடமும் ஆன்லைனில் பகிர வேண்டாம். இது போன்ற நிகழ்வுகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.