கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி -சேலம் சாலை ரவுண்டானா பகுதியில் உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் திரு.செல்வநாயகம் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் காவல் நினைத்துக் கொண்டு வந்து விசாரணை செய்தபோது ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கமணி வயது 24, தியாகராஜன் வயது 28 ஆகிய இருவரும் புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு உயர்ரக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தையடுத்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.