
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் மற்றும் சூசையப்பர் பட்டிணம் ஆகிய இடங்களில் 19.01.2021 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
காவலர்கள் மிடுக்கான உடையில் கவசம் ஏந்தி , மக்களுக்கு கவசமாக, பாதுகாப்பாக நாங்கள் உள்ளோம் என்பதை உணர்த்தும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இம்மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலுக்கும், ரவுடிசத்திற்கும், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனைக்கு இம்மாவட்டத்தில் இடம் கிடையாது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி மக்கள் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலருக்கு எவ்வித தயக்கமுமின்றி தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்.மேலும் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மக்களின் வாழ்விற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது
இவ்வணிவகுப்பில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேனி அவர்கள், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தேவராஜ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாரதிதாசன் அவர்கள்,மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபரிநாதன் அவர்கள் (பயிற்சி),
ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் திரு.ஜெயராம், உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் திரு.மலைச்சாமி, அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் மற்றும் 200க்கு மேற்பட்ட காவலர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த அணிவகுப்பில் வஜ்ரா,வருண் மற்றும் அனைத்து காவல்துறை வாகனங்களும் கலந்து கொண்டது.
