
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் மதுராந்தகம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்
.கவின்னா, காவல் ஆய்வாளர் திரு.ருக்மாந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் ராஜ் ஆகியோர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினர். விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் காவல்துறையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விளக்கினார். அப்பொழுது சாலை விபத்தில் இறந்த ஒருவருக்கு மேலவலம்பேட்டை பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பில் சாலை விபத்தில் இருந்தவருக்கு நிதி எஸ்பி கையால் வழங்கப்பட்டது மேலும் நிகழ்வில் மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர். திரு. ஆனந்தராஜ் அவர்கள் மதுராந்தகம் பகுதியில் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி எவ்வித விபத்தும் ஏற்படாமல் வாகனம் ஓட்டி வந்த ஓட்டுநர்களுக்கு சிறப்பு பரிசினையும் , கலந்துகொண்ட மக்களில் சுமார் 100 பேருக்கு மதுராந்தகம் போக்குவரத்து காவல் துறையின் சார்பில் இலவசமாக தலைகவசங்களையும் வழங்கினார்.