Home தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட ஊர் காவல் படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா.

புதுக்கோட்டை மாவட்ட ஊர் காவல் படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா.

0
புதுக்கோட்டை மாவட்ட ஊர் காவல் படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா.

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு 25.01.2021ஆம் தேதி இன்று பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல் துறையிடன் இணைந்து நேர்மையாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் கடமையாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருமதி.ஜெரினா பேகம், திரு.ராஜேந்திரன் அவர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here