Home தமிழ்நாடு <em>தூத்துக்குடி: சரக்கு வாகனத்தை ஏற்றி எஸ்.ஐ. கொலை – 10 தனிப்படை அமைப்பு!</em>

தூத்துக்குடி: சரக்கு வாகனத்தை ஏற்றி எஸ்.ஐ. கொலை – 10 தனிப்படை அமைப்பு!

0
<em>தூத்துக்குடி: சரக்கு வாகனத்தை ஏற்றி எஸ்.ஐ. கொலை – 10 தனிப்படை அமைப்பு!</em>

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனத்தை ஏற்றி ஏரல் காவல் நிலையை உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலு. இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது போதையில் சுற்றிய முருகவேல் என்பவரை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை கொன்று விட்டு தப்பியுள்ளார். காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here