காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பெரும் விபத்து.! டிஜிபி நேரில் ஆய்வு..!!

319

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூர் என்ற இடத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் மண் மற்றும் கற்கள் சரிந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடர்பாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர பாபு, இ.கா.ப (இயக்குநர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை) அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் மோப்ப நாய் பிரிவு மற்றும் தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கியவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் இடற்பாடுகளில் சிக்கிய 2 தொழிலாளர்கள் காயமுற்ற நிலையிலும், 8 தொழிளார்கள் பாதுகாப்பாக உயிருடனும் மீட்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here