Home தமிழ்நாடு பணியில் சேர்ந்தது இருந்து தொடர் சிக்ஸர்!<br>புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது ஜாபர்

பணியில் சேர்ந்தது இருந்து தொடர் சிக்ஸர்!
புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது ஜாபர்

0
பணியில் சேர்ந்தது இருந்து தொடர் சிக்ஸர்!<br>புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது ஜாபர்

கடந்த வாரம் தான் புதுக்கோட்டை நகர் கணேஷ் நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றார் முகமது ஜாபர்..

இவர் கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்றுக் நாள் முதல் தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கை ஈடுபட்ட வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு..

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் மற்றும் டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையில் ஆற்று மணலை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்ததோடு அவரை இயற்கை வளங்களை அழித்து நீர் வளத்திற்கு கேடு விளைவிப்பதாக குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்துள்ள சம்பவம் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக ஒரு டிப்பர் லாரியில் மணல் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையிலான போலீசார் அந்த வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது அந்த டிப்பர் லாரியில் இந்த ஐந்து யூனிட் மணல் குடுமியான்மலை பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த அரசந்தம்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (29) என்பவரை போலீசார் கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் அந்த டிப்பர் லாரி மற்றும் மணலையும் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்று வைத்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆற்று மணல் திருடி இயற்கை வளங்களை அழித்து நீர்வள ஆதார அமைப்புகளுக்கு தேடு ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்தது எடுத்து இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டதை அடுத்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆனந்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து தற்போது
போதை ஊசி விற்பனை செய்த நபரை அதிரடியாக கைது செய்தனர்..

புதுக்கோட்டை நகர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் நகர உட்கோட்டம் அவர்கள் உத்தரவின் பேரில், கணேஷ் நகர் காவல்நிலைய குற்ற எண் 132/2021 U/S 328 IPC r/w 21(a), 27(a) NDPS act வழக்கில் ரஞ்சித்குமார் மச்சுவாடி
கொட்டகைகார தெரு சேர்ந்த போதை மருந்து ஊசி விற்பனை செய்த குற்றத்திற்காக கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் முஹமது ஜாபர் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்..

கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் இது போல பல்வேறு துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆற்று மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் முக்கிய புள்ளிகளை கையும் களவுமாக பிடித்து இயற்கை வளங்களை காக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here