புதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுக்கும் பொருட்டு புதுக்கோட்டை அனைத்து மகளிர் உதவி காவல் ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

590

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அலுவலர்களுக்கு புதுக்கோட்டை எஸ் பி பாலாஜி சரவணன் இருசக்கர வாகனங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் 20 பேருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் இன்று புதிய இரு சக்கர வாகனங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்:புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்களை தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாகவும்,அவர்கள் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணிகள் செல்லும் போது எளிதில் குற்றச் செயல்களை தடுக்க முடியும் என்றும் அதற்காக இன்று முதற்கட்டமாக 20 காவல் நிலையங்களை சேர்ந்த பெண் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு இன்று இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்டமாக எஞ்சிய பெண் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு புதிய இரு சக்கரங்கள் வழங்கப்படும் என்றும் இதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தடுக்கப்படும் என்றும் எஸ்பி பாலாஜி சரவணன் கூறினார்..

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ நிர்வாக இயக்குநரும் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here