உளுந்தூர்பேட்டையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது.

325

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியான  திருச்சி, சேலம், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் அருகே கடந்த (17.04.21) அன்று இரவு சென்னையிலிருந்து தர்பூசணி ஏற்றிக்கொண்டு சேலம் சென்று கொண்டிருந்த லாரியை  டிரைவர் சாலையோரமாக நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணம்  மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடி சென்று விட்டனர்.
உடனே லாரி டிரைவர் எடக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களின் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன், அவர்களின் தலைமையில் எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கம், மற்றும் எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்செல்வன்,  காவலர்கள் மதுரைவீரன், மணிகண்டபெருமாள், இளந்திரையன், பிரபாகரன் ஆகியோர் மர்மநபர்களை  தேடிவந்தனர்.
இந்த நிலையில் போலிஸ் ரோந்து பணியின் போது உளுந்தூர்பேட்டை அருகே சென்னை, திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகம்படுகின்ற வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை  பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரண்பாடான பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில்.
சென்னையில் உள்ள பூந்தமல்லி தாலுக்காவை சேர்ந்த பாரிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் செல்வசேகர் மகன் கார்த்திக் (எ) கஞ்சா (32), மற்றும் தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி, பகவதி நகரில் வசித்து வரும் முருகன் மகன் சின்னசாமி (24) என்பதும் தெரியவந்தது.
அப்போது அவர்கள் லாரி டிரைவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒப்புக்கொண்டனர், மேலும்  அவர்களிடம் இருந்த பணம் 8700 ரூபாய் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும் இருவர் மீதும் வழிப்பறி கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here