புதுக்கோட்டை நகர காவல் துறையின் அதிரடி நடவடிக்கை ரவுடி
மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

355

கடந்த 04.04.2021-ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம்,
புதுக்கோட்டை நகர காவல் சரகத்தில் புதுக்கோட்டை பூ மார்க்கெட் பகுதியில்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி
மிரட்டி ரூ. 2500/- வழிப்பறி செய்த ரவுடி புதுக்கோட்டை போஸ்நகர் 10-ம்
வீதியைச் சேர்ந்த ரவுடி பூபதி(26) த/பெ
ஐயப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக புதுக்கோட்டை நகர
காவல் நிலைய குற்ற எண்: 261/21 u/s 392 r/w 397, 506(ii) IPC வழக்கு பதிவு
செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட
மேற்படி நபர் மீது மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி. பி. உமா மகேஸ்வரி, ஆணையின்படி குண்டர்
தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று 28.04.2021-ம் தேதி
திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மேலும் இது போன்ற
குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தும்
அச்சுறுத்தி வரும் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை
எடுக்கப்படும் என மாவட்ட
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here