புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டுக்கு முற்றுபுள்ளி வைக்க தொடர் அதிரடி நடவடிக்கையில் போலிசார் ..

423

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. லோக. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் மணல் கடத்தல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரித படுத்தப்பட்டுள்ளது..

இதன் தொடர்ச்சியாக 08.05.2021-ம் தேதி மாலை அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட குடுமியான்மலை, பரம்பூர், கிளிக்குடி, கோணகுறிச்சிப்பட்டி பனங்குடி பகுதிகளில் மணல் திருட்டு தடுப்பு தொடர்பாக கணம் துணைத் காவல் கண்காணிப்பாளர் திரு.அருள்மொழி அரசு இலுப்பூர் உட்கோட்டம் அவர்களின் உத்தரவின்படி ஆய்வாளர் அன்ன வாசல் காவல் நிலையம் திரு. சந்திரசேகரன் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய சோதனையில் மணல் திருட்டில் ஈடுபட்ட சுமார் 1 யூனிட் மணலுடன் ட்ராக்டர் டிப்பர் ஒன்றும் Mahindra 407 Van ஒன்றும் கைப்பற்றப்பட்டு அன்னவாசல் காவல்நிலைய குற்ற எண்கள்: 200/2021, மற்றும் 204/2021 uls 379 IPC r/w Sec 21 (1) & Sec 21 (2) TN Mines & Minerals (D&R) Act 1957-ன்படி வழக்குபதிவு செய்து மணல் திருட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here