
திசையன்விளை காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் கழுத்தில் கத்தி வைத்து செயின் பறிக்கும் மர்மகும்பலை மிகவும் திறமையாக செயல்பட்டு பிடித்து சிறையில் அடைத்து உரியவரிடம் செயினை ஒப்படைத்த திசையன்விளை காவல்ஆய்வாளர் சாய்லெட்சுமி அவர்களையும் ,திசையன்விளை உதவி காவல் ஆய்வாளர் கதிரேசன் அவர்களையும் மனதாரபாராட்டி வாழ்த்துகிறோம் .
1.திசையன்விளை காந்திஜி ரோட்டில் அதே தெருவை சார்ந்த கீதா என்பவரின் 9 பவுன் தாலிசெயினை பறித்த நபரை மடக்கிப்பிடித்து உரிய நபரிடம் 9 தாலிசெயினை வழங்கிஉள்ளார்கள்
2.விஜயஅச்சம்பாடு போஸ்ட் ஆபீஸில் பணிபுரியும் பெண் ஒருவர் பெட்டைகுளம் கோழிப்பண்ணை அருகே செல்லும்போது அவரது 5 1/2 பவுன்
செயினை பறித்த நபரை பிடித்து உரிய நபரிடம்
5 1/2செயினை வழங்கிஉள்ளார்கள்
3.உடன்குடி ரோடு கல்லியோபுரத்தை சேரந்த ஜீவநாயகம் அவர்களது வீட்டை உடைத்து 104கிராம் தங்கத்தை திருடிசென்ற வழக்கு…….
4.மருநாச்சிவிளையை சார்ந்த லட்சுமணன் அவர்களது வீட்டை உடைத்து 90கிராம் தங்கத்தை திருடிசென்ற வழக்கு…….
5.பெட்டைகுளம்
மதுபான கடையை உடைத்து விலைஉயர்ந்த மதுபாட்டலை திருடிய வழக்கு
6.திசையன்விளை சாய்பாபா கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வழக்கு…….
7.மன்னார்புரம்விளக்கு அம்பிகா பிரஸ் பின்புறம் சத்தியரூபன் அவர்களது வீட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வழக்கு ……..
இவ்வாறு பல வழக்குகளில் தொடர்புடைய திருட்டு கும்பலை மடக்கிபிடித்து சிறையில் அடைத்து
சுமார் 212 கிராம் தங்கம் 46000 பணத்தை உரியநபர்களிடம்
ஒப்படைத்து மேலும் இந்த கொரனா காலகட்டத்தில் மிக சிறப்பபாக பணியாற்றும்
திசையன்விளை காவல்ஆய்வாளர் சாய்லெட்சுமி அவர்களையும் ,திசையன்விளை உதவி காவல் ஆய்வாளர் கதிரேசன் அவர்களையும் மனதாரபாராட்டி வாழ்த்துகிறோம் .