
திருப்போரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கலைச்செல்வி, காவல் நிலையத்தில் பணிபுரியும், பெண் காவலர்களை ஒருமையில் பேசுவதும், இழிவுபடுத்தும் தவறான வார்த்தையில் திட்டுவதும், தற்கொலைக்கு தூண்டும்விதத்திலும் அவர் செயல் இருப்பதாக கூறப்பட்டுவந்தது.
பாதிக்கப்பட்ட சில பெண்கவலர்கள் வெளியே சொல்ல முடியாமலும், செய்வதறியாமலும் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு பெண் ஆய்வாளர் மீது தொடர்கதையாக புகார் இருந்து வந்த நிலையில், ஆய்வளர் தன்னை இழிவாக திட்டியதாக கூறி நேற்று முன்தினம் பெண் காவலர் கஜலட்சுமி,23. வேலை முடிந்து போலீஸ் குடியிருப்புக்கு சென்ற பின் அங்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை அறிந்த சக காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையறிந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி., குணசேகரன் மருத்துவமனைக்கு வந்து விசாரணை செய்தார். பின்னர் செங்கல்பட்டு எஸ்.பி.,சுந்தரவதனன் செல்போனில் பெண் காவலரிடம் விசாரணை செய்தார்.
இதுகுறித்து தற்கொலைக்கு முயற்சித்த கஜலட்சுமி தெரிவித்தது:
கடந்த 5 நாட்களுக்கு முன், ஆய்வாளர் என்னை ஆண் காவலர்களுடன் இணைத்து இழிவாக தகாத வார்த்தை கூறி திட்டினார். அப்போது 6 ஆண்காவலர்கள் அருகே இருந்தனர். இதனால் அதிகமாக மனமுடைந்தேன்.
இதற்கிடையில், என் பெற்றோர் கொரோனாவால் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து சரியாகி வீடு திரும்பி யுள்ளனர். அவர்களை பார்க்க மூன்று நாள் விடுப்பில் சென்றேன்.
பின் விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பினேன்.
ஆய்வாளர் திட்டியத்தை வெளியிலும், யாரிடமும் சொல்ல முடியாமல் மனதில் வைத்து வேதனை அடைந்தேன்.
இதனால், நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.
கொரோனா பரவல் குறைந்த உடன் எனக்கு திருமணம் ஆக உள்ளது.
மற்றபடி என் வீட்டிலோ வெளியிலோ சக காவலருடனோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று கூறினார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கூறியதாவது:
இந்த நிலை காவலர்களுக்கு மட்டும் அல்ல திருப்போரூரில் பொதுமக்களுக்கும் இதே நிலை தான் ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் தனக்கு வேண்டிய நபர் பார் நடத்துவதற்கும் குடிமகன்கள் எடுத்துச்செல்லும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து காவலர்களை வைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த மதுபாட்டில்களை கள்ளத்தனமாக பார் நடத்துபவர்களிடம் விற்பனை செய்துள்ளார்.
எனவே இ6 காவல் நிலைய ஆய்வாளர் மீது மேஜிஸ்ட்ரேட் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த உத்திரவிட வேண்டும் என்றனர்.
படவிளக்கம்:


பெண் காவலரை தற்கொலைக்கு தூண்டிய திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி