
23.06.2021.
திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி அருகே கடந்த 10-ம் தேதி சிவக்குமார் என்பவர் வீட்டில் ரூ.23 லட்சம், 41 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா அவர்களின் உத்தரவின் பேரில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் மேற்பார்வையில் தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் SI விஜய் புறநகர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் சார்பு ஆய்வாளர் அழகர்சாமி, பொன்குணசேகரன், முத்துச்சாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் காவலர்கள் மணிகண்டன், மருதுபாண்டி, கிருஷ்ணமூர்த்தி, ஜெயகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திண்டுக்கல்லை சேர்ந்த வீரபத்திரன், சுவாமிநாதன், ஹரிபிரசாத், ரமேஷ்ராஜா, வினோத் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15,80,000, 25 பவுன் தங்க நகைகள்,3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..